லேசான அறிகுறிக்கு சி.டி., ஸ்கேன் ஏன்?| Dinamalar

புதுடில்லி:”சாதாரண கொரோனா அறிகுறிக்கு, ‘சி.டி.,ஸ்கேன்’ சோதனை செய்ய தேவையில்லை,” என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:ஏராளமானோர், கொரோனா பரிசோதனையில், ‘பாசிட்டிவ்’ என, வந்த உடன், சி.டி., ஸ்கேன் எடுக்க ஓடுகின்றனர். பாசிட்டிவ் என வந்தாலும், அது மிதமான பாதிப்பு எனில், சி.டி., ஸ்கேன் சோதனை செய்ய தேவையில்லை. ‘எக்ஸ்ரே’ போதும்.

கொரோனா அறிகுறி இல்லாதோருக்கு, நுரையீரலில் லேசான பாதிப்பு இருந்தாலும், அது சிகிச்சையின்றி குணமாகி விடும்.மிதமான பாதிப்புக்கு ஆளானோர், ஆக்சிஜன் அளவு நன்றாக இருக்கும் பட்சத்தில், வீட்டில் தனிமையில் இருந்து, மருந்து, மாத்திரைகள் மூலம் குணமடையலாம். அவர்கள், சி.டி.,ஸ்கேன் சோதனை செய்ய தேவையில்லை.

இளைஞர்கள், தேவையின்றி அடிக்கடி, சி.டி.,ஸ்கேன் எடுப்பதால், பிற்காலத்தில் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாக, சர்வதேச அணுசக்தி ஆணையம் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.