ஸ்டாலின் முதல்வர்.. நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் !!

பெரும் பரபரப்பு எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். கொரோனா தொற்று காரணமாக பதிவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்க உள்ளதாதல் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் திமுக பெண் தொண்டர் ஒருவர் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் காணிக்கையாக செலுத்துவதாக கோவிலில் வேண்டியுள்ளார். இந்த நிலையில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதால் தனது காணிக்கையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலுக்கு வனிதா சென்றுள்ளார். அங்கு கோவில் முன்பு நின்று தனது நாக்கினை கத்தியால் அறுத்து உள்ளார். பின்னர் நாக்கை வாசல் படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.