ஹாலோ பிரதர்… எது முட்டாள்தனமான வாதம்… கிண்டலடித்தவருக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்

|

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர், முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுகத் தலைவர் முகஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், பிரியா பவானி சங்கரை தாறுமாறக கிண்டலடித்து பதிவிட்டு இருந்தார்.

ட்விட்டரில் கிண்டலத்த அந்த நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்

வாழ்த்து

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை வென்று , தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். நடிகை பிரியா பவானி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சிறப்பாக வழி நடத்துவீர்கள்

அதில், நீண்ட காலத்துக்குப்பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு, பேரிடரிடைய பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுஇருந்தார்.

எந்த சட்டமும் கிடையாது

பிரியாபவானி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, அவரது ரசிகர் ஒருவர், சகோதரி முதல் வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம். 2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது என்று பிரியா பவானி சங்கரை நக்கலடித்து பதிவிட்டு இருந்தார்.

சரியான பதிலடி

சரியான பதிலடி

நெட்டிசனின் இந்த நக்கலான பதிவிக்கு பதிலளித்து உள்ள பிரியாபவானி சங்கர், take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir. மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை என பொட்டில் அடித்தது போல காட்டமான பதில் அளித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.