ஹைதராபாத்தில் இருந்து மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை..!

ஹைதராபாத்தில் இருந்து மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தன. அவை கண்டெய்னர் வாகனம் மூலம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 60லட்சத்து20ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பிற்பகலில் தமிழகம் வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.