30 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. பிரபல தயாரிப்பு நிறுவனம் முதல்வரிடம் கோரிக்கை!

By Mari S

|

மும்பை: கொரோனா பாதிப்பில் இருந்து சினிமா தொழிலாளர்களை காப்பதற்காக பிரபல தயாரிப்பு நிறுவனம் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முன் வந்துள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சினிமா தொழிலாளர்களின் நலனை பேணும் வகையில் சுமார் 30 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட மகாராஷ்ட்ரா முதல்வரிடம் அனுமதி கோரியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் கொரோனாவின் தாக்கம் மிகப்பெரிய அளவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சினிமா கலைஞர்களையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது யஷ் ராஜ் சோப்ரா நிறுவனம்.

30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் FWICE எனப்படும் சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்த சங்கத்தில் மொத்தம் 2.5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

முதல்வரிடம் அனுமதி

முதல்வரிடம் அனுமதி

மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில், தினமும் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் நோக்கில் கொரோனா தடுப்பூசிகளை தொழிலாளர்களுக்கு செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான அனுமதியை மகாராஷ்ட்ரா முதல்வர் வழங்கவேண்டும் என்றும் யஷ் ராஜ் நிறுவனம் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

படப்பிடிப்புக்கு தடை

படப்பிடிப்புக்கு தடை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன்கள் அமலில் உள்ளன. கடந்த மாதம் எந்தவொரு படப்பிடிப்புக்கும் மகாராஷ்ட்ராவில் அனுமதி இல்லை என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்து இருந்தார்.

பயமில்லாமல் உழைப்பார்கள்

பயமில்லாமல் உழைப்பார்கள்

மீண்டும் சினிமா தொழில் முற்றிலுமாக முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சினிமாவையே நம்பி இருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளித்தால், அதன் காரணமாக பயமின்றி தங்களின் வாழ்வாதார பணியை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள உதவும் என்றும் அந்த கடிதத்தில் யஷ் ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.