#Breaking: சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் மு.க ஸ்டாலின்..!!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 75 கூட்டணி தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. 

அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் (125) மற்றும் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்.எல்.ஏக்கள் (8) ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மு.க ஸ்டாலின் தேர்வு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் ஆதரவு போன்றவைக்கான ஆலோசனை மற்றும் இறுதி முடிவுகள் போன்றவை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய மூத்த நிர்வாகிகள் தங்களின் மகிழ்ச்சியை அடைந்தனர். மேலும், சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க ஸ்டாலின், நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். 

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.