#BREAKING:- மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு: அரசாணை வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு அதைநடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 59ஆக இருக்கிறது. இந்த வயது வரம்பை உயர்த்தக் கோரி அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று முக்கிய செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.