இவ்ளோ கம்மி விலைக்கு Redmi Watch-ஆ? மே.13 அறிமுகம்; இப்போ வாங்கடா பார்ப்போம்!

ஹைலைட்ஸ்:

ரெட்மி வாட்ச் இந்திய அறிமுகம் உறுதியானது
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும்
மற்ற ப்ரீமியம் விலை வாட்ச்களுக்கு சிக்கல்

ரெட்மி இந்தியா நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளதால்,
ரெட்மி வாட்ச்
ஆனது வருகிற மே 13 அன்று இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் ரூ.7499-க்கு வரும் Realme-யின் ‘வேற லெவல்’ பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி வாட்ச் கடந்த நவம்பரில் சீனாவில் ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்சாக அறிமுகமானது. இது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதை வெளிப்படுத்த ரெட்மி இந்தியா நிறுவனம் நம்மை அதன் ட்வீட்டர் அக்கவுண்டிற்கு அழைத்து சென்றது.

Realme X7 Max : இந்த விலைக்கு இப்படி ஒரு Phone-லாம் வேற லெவல்ங்க; காத்திருப்போம்!

அந்த ட்வீட்டில் #WearYourVibe ஹேஸ்டேக் உள்ளது மற்றும் ஒரு டீஸர் வீடியோவும் உள்ளது. இருப்பினும் தயாரிப்பின் பெயரை வெளியான ட்வீட்டோ அல்லது டீஸர் வீடியோவோ வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், உற்று நோக்கும்போது, டீஸர் வீடியோவில் காட்டப்பட்டுள்ள வியரபிள் ஆனது டியது ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் தான் என்று தெரிகிறது.

குறிப்பிட்ட மே 13 ஆம் தேதியில் இந்நிறுவனம் ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனையும் நாட்டில் அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது. ஆக ஒரே நிகழ்வில் ரெட்மி வாட்ச் மற்றும் ரெட்மி நோட் 10 எஸ் ஆகியவை அறிவிக்கப்படும் என்பது போல் தெரிகிறது.

ரெட்மி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரெட்மி வாட்சிற்காக ஒரு பிரத்யேக பக்கத்தையும் உருவாக்கியுள்ளது. ஆனால் இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இதன் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை.

ரெட்மி வாட்ச்சின் விலை:

ரெட்மி வாட்ச் ஆனது சீனாவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,300 க்கு அறிமுகமானது.இது Elegant Black, Ink Blue மற்றும் Ivory White வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். உடன் Elegant Black, Ink Blue, Ivory White, Cherry Blossom Powder மற்றும் Pine Needle Green உள்ளிட்ட Strap கலர் வேரியண்ட்களும் வாங்க கிடைக்கும்.

ரெட்மி வாட்ச்சின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

– 1.4 இன்ச் (320×320 பிக்சல்கள்) சதுர வடிவிலான டிஸ்பிளே

– 323ppi பிக்சல் அடர்த்தி

– 2.5 டி சாப்ட் கிளாஸ் ஸ்க்ரீன்

– 120 க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ் விருப்பங்கள்

– வாட்ச் ஃபேஸ் ஸ்டோரில் அவ்வப்போது புதியவைகள் வரும்

– 5ATM நீர் எதிர்ப்பு ஆதரவு

– 50 மீட்டர் ஆழ நீரில் கூட வேலை செய்யும்

– ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்

– சிக்ஸ் ஆக்சிஸ் சென்சார்

– ஜியோமேக்னடிக் சென்சார்

– ஆம்பியண்ட் லைட் சென்சார்

– 230 எம்ஏஎச் பேட்டரி

முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்

– வழக்கமான பயன்பாட்டு சூழ்நிலையில் ஏழு நாட்கள் பேட்டரி ஆயுள்

– நீண்ட பேட்டரி ஆயுள் பயன்முறையில் 12 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

– outdoor cycling, indoor cycling, running, treadmill, walking, swimming in the pool மற்றும் free activities உட்பட ஏழு ஸ்போர்ட்ஸ் மோட்கள்

– தொடர்ச்சியான இதய துடிப்பு கண்காணிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் ரெஸ்டிங் ஹார்ட் ரேட்டை 30 நாள் காலத்திற்கு பதிவுசெய்கிறது.

– இந்த அம்சம் சுகாதார பிரச்சினைகளில் நீண்டகால மாற்றங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.

– sleep monitoring, effective stand monitoring மற்றும் breathing exercises உடன் வருகிறது.

– இதன் multi-function NFC ஆதரவானது சப்வே, பஸ் மற்றும் பிற கட்டணங்களை செலுத்துவதற்கு உதவுகிறது

– இதுஆண்ட்ராய்டு 5.0 அல்லது iOS 10 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் இயங்கும் தொலைபேசிகளுடன் இணக்கமானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.