ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா.. 3,780 பேர் பலி: 24 மணி நேரமும் எரியூட்டப்படும் சடலங்கள்.. நரகத்தில் இந்திய மக்கள்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 3,82,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்தது.
* புதிதாக 3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,26,188 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,38,439 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34,87,229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.91% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 16.87% ஆக அதிகரித்துள்ளது.
* இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.