கணவரை கட்டி அணைத்து செல்ஃபி… காஜல் அகர்வால் வெளியிட்ட பிக்ஸ் !

|

சென்னை : நடிகை காஜல் அகர்வால் தனது கணவரை கட்டி அணைத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமாக உள்ளார்.

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஹனிமூன்

நடிகை காஜல் அகர்வால் கௌதம் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக நடத்தப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து ஹனிமூனுக்கு மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வாய்பிளக்கவைத்தனர்.

ஹனிமூன்

ஹனிமூன்

நடிகை காஜல் அகர்வால் கௌதம் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக நடத்தப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து ஹனிமூனுக்கு மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வாய்பிளக்கவைத்தனர்.

வெற்றி நாயகி

வெற்றி நாயகி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர், விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் மற்றும் அஜித்துடன் விவேகம், மேலும் முன்னணி நடிகர்களான சூர்யா, தனுஷ்,கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, ஆச்சார்யா, ஹேய் சனாமிகா போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியலிலும் நடித்துள்ளார்.

கட்டிஅணைத்து செல்பி

கட்டிஅணைத்து செல்பி

தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால். இதனால் வீட்டில் பொழுதை கழித்து வரும் காஜல் அகர்வால், தனது காதல் கணவரை கட்டி அணைத்தபடி செல்ஃபி எடுத்துள்ளார். இந்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.