விளம்பர மாடலாக வந்து பின் திரையுலகில் கால் பதித்தவர் பியா பாஜ்பாய்.  தமிழில் கோவா, கோ  உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் தன்னுடைய அழகாலும், கவர்ச்சியாலும் திரும்பி பார்க்க வைத்த இவரது குடும்பத்தில் கொரோனா தொற்று காரணமாக இவரது சகோதரர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நடிகை பியா பாஜ்பாயின் சகோதரர் உத்தரபிரதேசம், ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடிகை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது சகோதரருக்கு வென்டிலேட்டர் உதவி வேண்டும் என கோரி இருந்தார். வெண்டிலேட்டர் உதவியை கொண்டுவர குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவரை காப்பாற்றமுடியவில்லை.

இன்று காலை தனது சகோதரர் உயிரிழந்துவிட்டதாக, பியா பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெண்டிலேட்டர் உதவி கிடைக்காமல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிரபல நடிகையின் சகோதரர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பியா பாஜ்பாய்,  தனது சினிமா பயணத்தை 2008 ஆம் ஆண்டில் ‘போய் சொல்லா போரம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தொடங்கியவர்.  பின்னர் அஜித்தின் ‘ஏகன்’ மற்றும் ஜீவாவின் ‘கோ’ ஆகிய படங்களில் புகழ் பெற்றார். பியா பாஜ்பாய் பின்னர் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தாலும், இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை. தமிழில் கடைசியாக விஜயலட்சுமி இயக்கத்தில் 2018 தமிழ்-மலையாள இருமொழி ‘அபியம் அனுவும்’ என்கிற படத்தில் பியா பாஜ்பாய் நடித்திருந்தார்.