சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவுவதால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். நிலைமையை ஆர்.பி.ஐ. உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சென்ற ஆண்டை விட இந்த வருடம் கொரோனா அலை தீவிரமாக இருந்தாலும் அதன் பொருளாதார பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏனென்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் இல்லை. ஓரிரு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கிறது. வேறு சில மாநிலங்களில் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு வகையான பொது முடக்கம் இருக்கின்றன.
கொரோனா வைரஸ்

கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம்.

நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி அவசர ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளால் மீதமுள்ள ஆண்டு பணவீக்கம் பாதிக்கப்படும்.

கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், போலீசார் தன்னலமின்றி சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.