சூப்பர் செய்தி.. தொடர்ச்சியாக அதிகரிக்கும் தேவை.. உச்சம் தொடும் ஏற்றுமதி..!

டெல்லி: கொரோனாவின் தாக்கம் என்பது ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், மறுபுறம் தேவை என்பது குறையவில்லை. மாறாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் எதிரொலியாக ஏற்றுமதி ஆர்டர்கள் என்பது அதிகரித்துள்ளன.

குறிப்பாக முன்னணி பணக்கார நாடுகளில் இருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய முழு லாக்டவுன் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவே சந்தைக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
.

சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி

இது குறித்து இந்தியாவின் ஏற்றுமதி கூட்டமைப்பு கழகத்தின் FIEO) தலைவர் எஸ் கே. சராஃப் கூறுகையில், பெரும்பாலான மாநிலங்களில் இருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பான சேவைகள் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் சரக்கு போக்குவரத்தும் மாநிலங்களுக்கு இடையே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்றுமதியில் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார் .

இடையூறுகளும் உண்டு

இடையூறுகளும் உண்டு

எப்படியிருப்பினும் இந்த பெருந்தொற்று நோய் காரணமாக பங்குதாரர்கள், ஆள்பற்றாக்குறையால் முழு அளவில் செயல்படவில்லை. ஆக இது சற்றே தொழிற்துறையில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் மோசம் இல்லை. இதற்கிடையில் மே மாத மத்தியில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கம் தரலாம்
 

ஊக்கம் தரலாம்

இதன் பின்னரே நிலைமை மேம்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இத்தகைய அனுமானங்கள், ஏற்றுமதியாளர்களை முன்கூட்டியே ஆர்டர்களை செய்ய ஊக்கமளிக்கலாம். இதன் எதிரொலியாகவே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதியானது கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகரித்து, 30.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. எனினும் இதே காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறையானது 15.24 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

இதனால் இந்த ஏற்றுமதி வளர்ச்சியானது இனியும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வளர்ச்சியானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இனி வரும் மாதங்களிலும் இது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது தடுப்பூசிகள் போட ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது சந்தைக்கு ஊக்கத்தினை அளிக்கும். இது தேவையை ஊக்குவிக்கும். ஆக இதனால் வரும் மாதங்களிலும் ஏற்றுமதி அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.