செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுபாடு.. இரவோடு இரவாக தனியார் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள்

செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுபாடு.. இரவோடு இரவாக தனியார் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள்

|

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் 11 பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வரும் சூழலில் டெல்லி, மும்பை, உத்தரப்பிரதேசம் உள்பட நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் உயிரிழந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சூழலில் தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ஐசியு தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலைமை மோசமாகி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு உச்சம் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு பெட்கள் தேவை அதிகரித்துள்ளது,

செங்கல்பட்டில் ‘பகீர்’.. 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி – ஆக்சிஜன் தட்டுப்பாடா?

செங்கல்பட்டு மருத்துவமனை

செங்கல்பட்டு மருத்துவமனை

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் 11 பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக மாற்ற வார்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இரவோடு இரவாக தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆக்ஸிஜன் வசதி

ஆக்ஸிஜன் வசதி

அரசு தலைமை மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத வகையில் மருத்துவம் நிர்வாகம் செயல்பட வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இருப்பு உள்ளது

இருப்பு உள்ளது

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர கொரோனா தொற்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2.5 ஆயிரம் கிலோ பயன்பாடு

2.5 ஆயிரம் கிலோ பயன்பாடு

தற்போது மருத்துவமனையில் 23000 கிலோ கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்கர்கள் உள்ளன. இதில் தினமும் 2.5 ஆயிரம் கிலோ மட்டுமே நோயாளிகளின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது என கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.