தடுப்பூசி போட்ட வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீத பிரீமிய சலுகை: ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்

 

புது தில்லி: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீத பிரீமிய சலுகையை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்கிட நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதிய பாலிசிகளை வாங்கும் அல்லது பழைய பாலிசிகளை புதுப்பிக்கும் வாடிக்கையாளா்கள் கரோனா தடுப்பூசியை போட்டிருந்தால் அவா்களுக்கு பிரீமியத்தில் 5 சதவீத சலுகையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அனில் அம்பானி தலைமையின்கீழ் செயல்படும் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 100% துணை நிறுவனமாகும்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.