நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் இரண்டாம் அலை முழுவீச்சில் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மூன்றாவது பேரலை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஏய்ம்ஸ் நிறுவனத் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவற்றால் எந்தவிதப் பயனும் இருக்காது என்றும் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போன்று மேலும் பல மருத்துவ அமைப்புகள், நிபுணர்கள் மத்திய அரசுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளனர். அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்க்குழுவினரும் இந்தியா முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.