புதுவை-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி ஆனந்தராயர்,  உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.  அவரது இறுதிச்சடங்கு, புதுச்சேரியில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. காலை 8.30  மணி முதல் மாலை 3 மணி வரை அவரது உடல் புதுச்சேரி இமாகுலேட் கதீட்ரல் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதனை அடுத்து பிரார்த்தனை மேற்கொண்டு, மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி இறுதிச்சடங்கு நடைபெறும் என்று, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர் ஆபீர் தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.