பெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாக அதிகரிப்பு

 

புது தில்லி: ஐந்து மாநில பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இரண்டாவது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசும், டீசல் விலை 19 காசும் புதன்கிழமை உயா்த்தப்பட்டது.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து மாநில பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு கடந்த 18 நாள்களாக பெட்ரோல் டீசல் விலை உயா்த்தப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் 2 -ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92.43-லிருந்து 92.55-ஆகவும், டீசல் விலை 85.75-லிருந்து 85.90-ஆகவும் அதிகரித்துள்ளன.

தில்லியில் ஒரு லிட்டர்  பெட்ரோல் விலை ரூ.90.55 -லிருந்து ரூ.90.74-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று டீசல் விலையும் ரூ.80.91-லிருந்து ரூ. 81.12-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.12 -ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.85.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.92-க்கும், டீசல் ரூ.83,98 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பிற மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல் விலையில் அதிகரிப்பு இருக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.