வெறும் ரூ.7499-க்கு வரும் Realme-யின் வேற லெவல் பட்ஜெட் Phone; எப்போது?

ஹைலைட்ஸ்:

ரியல்மி சி20ஏ அறிமுகம் உறுதியானது
விலை நிர்ணயத்தையும் நம்மால் யூகிக்க முடியும்
இந்திய அறிமுகம் குறித்து சரியான தகவல் இல்லை.

கடந்த மாதம், ரியல்மி நிறுவனம் மூன்று புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுக செய்தது. அவைகள் – ரியல்மி சி 20, ரியல்மி சி 21 மற்றும் ரியல்மி சி 25 ஆகும்.

Flipkart Sale-ல எக்காரணத்தை கொண்டும் இந்த Phone-ஐ மட்டும் வாங்கிடாதீங்க!

இப்போது, இந்த பிராண்ட் மற்றொரு சி-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அதன் பேஸ்புக் அக்கவுண்ட் வழியாக ரியல்மி சி20ஏ ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியது.

6 மாசம் கூட ஆகல, அதுக்குள்ள! இதுக்கு தான் இவ்ளோ பில்ட்அப்-ஆ? கடுப்பில் இந்தியன்ஸ்!

புதிய ரியல்மி சி20ஏ சர்ட்போன் ஆனது வருகிற தேதி மே 12 ஆம் தேதி பங்களாதேஷில் அறிமுகமாகும். நினைவூட்டும் வண்ணம் பங்களாதேஷில் ஏற்கனேவே ரியல்மி சி 21 மற்றும் ரியல்மி சி 25 மாடல்கள் வாங்க கிடைக்கிறது, அந்த வரிசையில் ரியல்மி சி20ஏ மாடலும் இணையும்.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி சி20ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டில், ரியல்மி சி20ஏ ஆனது 6.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனுடன், ரியல்மி சி20ஏ “சிறந்த உருவாக்க தரத்தை” கொண்டிருக்கும் என்று பிராண்ட் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இதை தவிர்த்து ரியல்மி சி20ஏ தொடர்பாக ரியல்மி நிறுவனம் வேறு எதையும வெளிப்படுத்தவில்லை.

ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் பிராண்டால் வெளிப்படுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, ரியல்மி சி20ஏ ஆனது ரியல்மி சி20 / ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட மாடலாக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

இது வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் எங்களால் உறுதியாக எதுவும் கூற முடியாது. ஸ்மார்ட்போனின் வெளியீடு நெருங்கி வருவதால், அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் என்று நம்புகிறோம். ரியல்மி சி20ஏ ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை.

என்ன விலைக்கு வரும்?

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, வரவிருக்கும் ரியல்மி சி20ஏ மாடல் ஆனது இந்தியாவில் ரூ.7,499 என்கிற விலை நிர்ணயத்தை சுற்றி எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம். இது அதிகாரபூர்வமான விலை நிர்ணயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அறிமுகமான Realme C20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் அளவிலான எச்டி + எல்சிடி பேனலை, 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்புடன் கொண்டுள்ளது மற்றும் இது கார்னிங் கொரில்லா கிளாஸால் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் மேலும் விரிவாக்கப்படும் ஆதரவினையும் கொண்டுள்ளது. இது IMG PowerVR GE8320 GPU-வை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த பட்ஜெட் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8 எம்பி கேமராவை கொண்டுள்ளது மற்றும் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5 எம்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சிங்கிள் மோனோ ஸ்பீக்கர் கிரில் உள்ளது.

ரியல்மி சி 20 ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் ஒரு 5000 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. தவிர கீழே உள்ள மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் இது 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக் ஆதரவை கொண்டுள்ளது. இது ரியல்மி யுஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10- ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

Realme C20A விவரங்கள்

முழு அம்சங்கள்

ஃபெர்பார்மன்ஸ்
MediaTek Helio G35

டிஸ்பிளே
6.5 inches (16.51 cm)

சேமிப்பகம்
32 GB

கேமரா
8 MP

பேட்டரி
5000 mAh

price_in_india
11084

ரேம்
2 GB

முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.