#BREAKING ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மு.க. ஸ்டாலின்.. அமைச்சரவை பட்டியலும் அளித்தார் !!

133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.அஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றனர்.

ஆளுநரிடம் திமுக எம்எல்ஏக்கள் 133 பேரின் ஆதரவு கடிதத்தை அளித்து மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமிழக அமைச்சரவை பட்டியலையும் அவர் ஆளுநரிடம் அளித்தார். 

இதனையடுத்து நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. முதல்முறையாக மு.க. ஸ்டாலின்  முதலமைச்சராக பதவியேற்பதால் அவரது கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.