கொந்தளித்த எரிமலை.. அதுவும் 4 முறை… பீதியில் பொதுமக்கள்!

ஹைலைட்ஸ்:

4 முறை கொந்தளித்த மெராபி எரிமலை
பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொதுமக்கள்

இந்தோனேசியா
அடிக்கடி இயற்கை சீற்றங்களையும், பேரிடர்களையும் சந்திக்கும் நாடு. வெள்ளம், புயல், நிலச்சரிவு, சுனாமி,
எரிமலை
வெடிப்பு போன்றவற்றை இந்தோனேசியா அடிக்கடி எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள
மெராபி எரிமலை
நான்கு முறை வெடித்து பீதியை கிளப்பியுள்ளது. மெராபி எரிமலை நான்கு முறை வெடித்ததாகவும், 1.5 கிலோமீட்டருக்கு எரிமலைக் குழம்பு வழிந்தோடியதாகவும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

யோக்யகர்தா, மத்திய ஜாவா மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலை உச்சியில் இருந்து 50 மீட்டர் உயரத்துக்கு வெள்ளை புகையை கக்கியுள்ளது.

எகிறும் கருப்பு பூஞ்சை பரவல்.. முதல் நோயாளி பலி!

எரிமலையை சுற்றி 3 கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆபத்தான பகுதி என அரசு அறிவித்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் இருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மெராபியில் இருந்து ஓடும் நதிகளுக்கும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெராபி எரிமலை 2010ஆம் ஆண்டு வெடித்தபோது பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

இந்தோனேசியாவில் 127 ஆக்டிவ் எரிமலைகள் இருக்கின்றன. மேலும், 50 லட்சம் மக்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.