இது பெரிய விலைக்கு வரும்னு பார்த்தா Budget Phone-ஆ வருது; Redmi, Realme ஷாக்!

ஹைலைட்ஸ்:

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போனின் விலைகள் லீக்
இந்திய அறிமுகம் அமேசான் வழியாக நாளை நடக்கவுள்ளது
இதன் விலை பல லேட்டஸ்ட் ரெட்மி, ரியல்மிகளுக்கு சிக்கலாக இருக்கும்

iQoo Z3 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

7th – 10th June 2021: அடுத்த 4 நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய போன்கள்; இதோ லிஸ்ட்!

வரவிருக்கும் புதிய iQoo ஸ்மார்ட்போன் ஆனது மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும் என்றும் அதன் விலை நிர்ணயங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன்.8 வரை எக்காரணத்தை கொண்டும் Realme 8, Oppo A54-ஐ வாங்கிடாதீங்க!

நினைவூட்டும் வண்ணம் iQoo Z3 ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ட்ரிபிள் ரியர் கேமராக்கள், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பிலான டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G SoC மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே போன்ற பிரதான அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் iQoo Z3 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்:

ட்விட்டர் அக்கவுண்ட் @Gadgetsdata-வை கையாளும் டெபயன் ராய் என்கிற டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்தியாவில் iQoo Z3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.19,990 அல்லது ரூ.20,990 க்கும், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.21,990 க்கும் மற்றும் டாப்-ஆஃப்-லைன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.23,990 க்கும் வாங்க கிடைக்கும்.

வெளியான அறிக்கை விலை விவரங்கள் உண்மையாகும் பட்சத்தில், iQoo Z3 ஸ்மார்ட்போன் ஆனது Mi 10i உள்ளிட்ட ரூ.20கே பட்ஜெட்டில் உள்ள பல ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு பெரிய தலைவலியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

iQoo Z3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

iQOO Z3 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்பால் இயக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது, இந்த ப்ராசஸர் கொண்டு இந்தியாவிற்கு வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

சமீபத்தில், அறிமுகத்திற்கு பின்னர் இது அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக அமேசான் லிஸ்டிங் வழியாக Z3 குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனம் வெளிப்படுத்தியது. அதாவது வேகமான சார்ஜிங், கேமராக்கள், கேமிங் செயல்திறன் மற்றும் வடிவமைப்பு குறித்த விவரங்கள் இதில் அடங்கும்.

அறியாதவர்களுக்கு iQOO Z3 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மார்ச் மாதம் சீனாவில் தொடங்கப்பட்டது. சீன வேரியண்ட்டுக்கு ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப் கிடைப்பதால், இந்திய மாறுபாட்டில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடந்தால், இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் 6.58 இன்ச் புல் எச்டி + டிஸ்ப்ளே இடம்பெறும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜைப் பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 16 மெகாபிக்சல் முன் பக்க கேமரா இடம்பெறலாம்.

இது 55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,400 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். மேலும் இது ஆண்ட்ராய்டு 11-ஐ இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால், இது வெப்பச் சிதறலுக்கான திரவ-குளிரூட்டும் முறையை பெறலாம் உடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் பெறலாம்.

வெளியான அம்சங்களை வைத்து பார்க்கும் போது, அதிகாரப்பூர்வ வார்த்தை இல்லை என்றாலும், iQOO Z3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000 க்கு கீழ் என்கிற விலைக்கு வரக்கூடும்.

மேற்கண்ட அம்சங்களெல்லாம் உண்மையாகும் பட்சத்தில் சியோமி மி 10i 5 ஜி மற்றும் சமீபத்திய சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி போன்றவற்றுடன் இது கடுமையாக போட்டியிடும் என்று நாம் நம்பலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.