இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும்..! அமெரிக்க எம்பிக்கள், டெக்சாஸ் ஆளுநர் உள்ளிட்டோர் ஜோ பைடனுக்கு…

இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என அந்த நாட்டின் பல எம்.பிக்களும், டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அப்பாட் உள்ளிட்டோரும் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி ஒரு பேரழிவாக உள்ளதால், அதில் இருந்து மீள தனது நெருங்கிய கூட்டாளியான இந்தியாவுக்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இரண்டரை கோடி தடுப்பூசி டோசுகளில் முதற்கட்டமாக ஒன்று புள்ளி 9 கோடி டோசுகளை இந்த மாத இறுதிக்குள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க உள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.