இந்தியா, இலங்கை தொடர் ஜூலை 13-இல் தொடக்கம்

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் முழு அட்டவணையை ஒளிபரப்பும் நிறுவனமான சோனி நெட்வர்க் திங்கள்கிழமை வெளியிட்டது.

இருஅணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது.

முதல் ஒருநாள் ஆட்டம்: ஜூலை 13
2-வது ஒருநாள் ஆட்டம்: ஜூலை 16
3-வது ஒருநாள் ஆட்டம்: ஜூலை 18

இதைத் தொடர்ந்து, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 21-இல் தொடங்குகிறது.

முதல் டி20: ஜூலை 21
2-வது டி20: ஜூலை 23
3-வது டி20: ஜூலை 25

இந்தத் தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள எந்தவொரு இந்திய வீரரும் விளையாடமாட்டார்கள். இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.