இன்று மாலை வரை இ-பதிவு செய்ய முடியாது !!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த வரும் நிலையில் இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இ-பதிவு செய்து வாடகை ஆட்டோக்கள், கார்களில் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இ-பதிவு செய்வதற்கான இணையதளத்தில் கூடுதலாக இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இபதிவு உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது .இன்று ஒரே நாளில் லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியதாகவும் கூறப்படுகிறது.மாலைக்குள்  இ-பதிவு இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தகவல் தொழில்நிட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.