இப்படி ஒரு Phone-ஐ விட்டா.. யாருக்கு தான் வேற மாடல் வாங்குற ஆசை வரும்?

ஹைலைட்ஸ்:

விவோ Y73 இந்திய அறிமுகம் உறுதியானது!
வருகிற ஜூன் 10 இல் வெளியாகும்!
பல போக்க, ரியல்மி, ரெட்மி மாடல்களுக்கு சிக்கல் தரும் விலை!

போக்கோ நிறுவனம் அதன் எம்3 ப்ரோ மாடலை ரூ.17,999 மற்றும் அதற்கு கீழான விலைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ரெட்மி நோட் 10 தொடர் மற்றும் ரியல்மி 8 தொடர் மாடல்களின் நிலை பரிதாபமாக இருக்கும் நேரத்தில், வரவிருக்கும் போக்கோ மாடலுக்கும் சேர்த்து சிக்கலை தரும் விலையில் ஒரு விவோ ஸ்மார்ட்போன் ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.

7th – 10th June 2021: அடுத்த 4 நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய போன்கள்; இதோ லிஸ்ட்!

ஒரு புதிய ட்வீட் வழியாக, விவோ நிறுவனம் வருகிற ஜூன் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அதனொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த ஸ்மார்ட்போன் – விவோ Y73 ஆகும்.

OnePlus Nord CE 5G விலை வெளியானது: சொன்னதும் வாங்க ரெடி ஆகிடுவீங்க!

முன்னதாக வெறும் லீக்ஸ் தகவல்களாகவே அரசல்புரசலாக வெளியான விவோ ஒய் 73 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்தது. அதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வழியாக வெளியான டீசர்களின் படி, விவோ ஒய் 73 ஸ்மார்ட்போன் ஆனது நீலம் மற்றும் கருப்பு என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என்பது போல் தெரிகிறது.

வடிவமைப்பை பொறுத்தவரை முன்பக்கத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருப்பதை விவோ டீஸர் உறுதிப்படுத்துகிறது. பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளன.

Vivo Y73 என்ன விலைக்கு வரும்?

விவோ ஒய் 73 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ரூ.20,000 என்கிற பட்ஜெட் பிரிவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிப்ஸ்டர் முகுல் சர்மா (aka @stufflistings) கூறியுள்ளார். இந்த தகவலை அவர் வெளியிட்ட போது, அவர் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிமுகமாகும் என்று பரிந்துரைத்தார், தற்போது அது உண்மையாகி உள்ளது.

பெரும்பாலான “ரெட்மி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்” ரூ.20,000 க்குள் மற்றும் அதை சுற்றிய விலை நிர்ணயங்களையே கொண்டிருப்பதால் விவோவின் இந்த லேட்டஸ்ட் – 20கே பட்ஜெட் – மொபைல் நிச்சயமாக “அவைகளுக்கு” தலைவலியை கொடுக்கும்.

Vivo Y73 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

அம்சங்களை பற்றி பேசுகையில், வரவிருக்கும் இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் பேட்டர்ன் உடன் கிளாஸ் பேனலையும் மற்றும் செவ்வக வடிவிலான கேமரா அமைப்பையும் கொண்ட நீல நிற கிரேடியண்ட் பூச்சை கொண்டிருப்பதை காண முடிகிறது

செவ்வக வடிவிலான கேமரா அமைப்பிற்குள் விவோ ஒய் 37-க்கான கேமாராக்கள் முக்கோண வடிவத்தில் உட்பொதிக்கப்பட்டு இருக்கலாம். மேலே ஒரு பெரிய 64 மெகாபிக்சலும், கீழே இரண்டு சிறிய சென்சார்களும் அமர்ந்திருக்கும்.

பவர் மற்றும் வால்யூம் பொத்தான்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. ஸ்மார்ட்போனின் முன் பக்க வடிவமைப்பு ரெண்டரில் தெரியவில்லை. இருப்பினும் இது மெலிதாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

ரெண்டர் வழியாக விவோ ஒய் 73 ஸ்மார்ட்போனின் மற்ற பிரதான அம்சங்களை பொறுத்தவரை, இது AMOLED டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் போன்றவைகளை கொண்டிருக்கும்.

முன்னதாக வெளியான கூகுள் பிளே கன்சோல் மற்றும் ஐஎம்இஐ தரவுத்தளத்தில் காணப்பட்ட போதும் விவோ ஒய் 73 ஸ்மார்ட்போனை பற்றி சில விவரங்கள் வெளியாகின.

Infinix Note 10, Note 10 Pro: ரூ.10000 பட்ஜெட்ல இப்படி ஒரு Phone-ஆ! இனி Redmi Note 10, Realme 8 எதுக்கு?

அதன்படி, இது மீடியா டெக் ஹீலியோ ஜி 90 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம், உடன் 8 ஜிபி ரேம் உடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 மென்பொருளில் இயங்கவும் வாய்ப்புள்ளது.

கடைசியாக விவோ ஒய் 63 ஸ்மார்ட்போனில் பெரும்பாலும் Full எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X70 Series எப்போது அறிமுகமாகும்?

விவோ நிறுவனத்தை பற்றிய மற்ற செய்திகளை பொறுத்தவரை, விவோ நிறுவனம் அதன் X தொடரின் கீழ் அதன் அடுத்தகட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அது விவோ எக்ஸ்70 சீரிஸ் ஆகும். இது 2021 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ Y73 விவரங்கள்

முழு அம்சங்கள்

ஃபெர்பார்மன்ஸ்
Snapdragon 439

கேமரா
13 MP

பேட்டரி
3360 mAh

டிஸ்பிளே
5.99″ (15.21 cm)

ரேம்
3 GB

முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.