இலங்கை அருகே மூழ்கும் கப்பலின்தகவல் பெட்டி மீட்பு

புதுடெல்லி: குஜராத்தின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து கடந்த மே 20ம் தேதி,  சிங்கப்பூரை சேர்ந்த, ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ கப்பல் கிளம்பியது. கொழும்பு அருகே அடுத்த நாள் அது தீ விபத்துக்கு உள்ளானது. இலங்கை, இந்திய கடற்படைகள் போராடி தீயை அணைத்தன. ஆனால், அந்த கப்பல் சில தினங்களுக்கு முன்பு மூழ்க ஆரம்பித்தது. இந்த கப்பலில் ஆபத்தான ரசாயனங்களும், கச்சா எண்ணெய்யும் பல நூறு டன் இருக்கின்றன. இவை கடலில் கலந்தால் மிகவும் மோசமான சுற்்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. இதனால், நிலைமையை கடற்படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கப்பலில் இருந்து விடிஆர் எனப்படும் ‘தகவல் சேகரிப்பு கருவி’யை நேற்று இலங்கை கடற்படை மீட்டுள்ளது. வி கப்பலின் செயல்பாடுகளை இது தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கும். விசாரணைக்கு இது உதவியாக இருக்கும் என ்அதிகாரிகள் கூறினர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.