எல்லாமே ஆச்சரியம்: வண்ணங்கள் நிறைந்த பிரபஞ்சத்தின் காமா வெடிப்பு- அதிநவீன முறையில் பதிவு செய்த விஞ்ஞானிகள்!

தென்மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நமீபியா விஞ்ஞானிகள் குழு, வீழ்ச்சியடைந்த நட்சத்திரத்தில் இருந்து காமா கதிர்வீச்சின் அற்புதமான அண்ட வெடிப்பை பதிவு செய்துள்ளனர். பெரிய நட்சத்திரம் அதாவது சூரியனின் ஐந்து அல்லது 10 மடங்கு பெரியது. இது திடீரென வெடித்து கருந்துளையாக மாறும்போது இந்த வெடிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

ஆற்றல் வாய்ந்த காமா வெடிப்பு

ஆற்றல் வாய்ந்த காமா வெடிப்பு

காமா கதிர்வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்த கதிர்வீச்சுகளில் ஒன்றாகும். பூமிகளில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அருகிலுள்ள ஜிஆர்பி-களில் இதுவும் ஒன்றாகும். இந்த வெடிப்பானது ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதை ஒப்பிடுகையில் வழக்கமான ஜிஆர்பி சுமார் 20 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடக்கும். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள காமா கதிர் வெடிப்பு அருகாமையில் நடந்ததால் துள்ளியமான வண்ணங்களை காண முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது.

ஆச்சரியங்கள் நிறைந்த பிரபஞ்சம்

ஆச்சரியங்கள் நிறைந்த பிரபஞ்சம்

இந்த நிகழ்வு பிரபஞ்சத்தில் காமா கதிர் வெடிப்புகளால் ஏற்பட்ட கோட்பாடுகளை சவால் செய்யும் விதமாக இருந்தது. ஆரம்ப வெடிப்புக்கு பிறகும் விஞ்ஞானிகள் மூன்று நாட்கள் வரை இதன் பின்னணியை ஆய்வு செய்தனர். இதுகுறித்து டெஸி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த ஆராய்ச்சி மையம் இதுபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு உலகின் முன்னணி வசதிகளை பெற்றுள்ளது.

ஃபெர்மி மற்றும் ஸ்விஃப்ட் செயற்கைக்கோள்கள்

ஃபெர்மி மற்றும் ஸ்விஃப்ட் செயற்கைக்கோள்கள் எரிடனஸ் விண்மீன் தொகுப்பில் கதிர்வீச்சு வெடிப்பை கண்டறிந்தனர். அதேபோல் அண்ட நிகழ்வு வெடிப்பு வீடியோ குறித்த விளக்கத்தையும் யூடியூப்பில் டெஸி (Desy) வெளியிட்டுள்ளது. காமா கதிர் வெடிப்பை பூமியில் இருந்து செயற்கைக்கோள்கள் மற்றும் தொலைநோக்கிகள் மூலம் இது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு

சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு

GRB 190829A என்ற பெயர் கொண்ட கதிர் வெடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெடிக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வானியல் ஆய்வாளர்கள் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு ஏற்பட்டு நட்சத்திரம் இறந்து கருந்துளையாக மாறும் சமயத்தில் காமா கதிர் வெடிப்பு ஏற்படுகிறது. உலகின் முன்னணி அதிநவீன ஆற்றல் கொண்ட தொலைநோக்கிகள் மூலம் மூன்று நாட்களாக தொடர்ந்து ஆய்வு செய்து காமா வெடிப்பு காட்சியை பதிவு செய்துள்ளனர்.

கருந்துளை நோக்கி உறிஞ்சப்படும் பொருட்கள்

கருந்துளை நோக்கி உறிஞ்சப்படும் பொருட்கள்

கருந்துளை நோக்கி உறிஞ்சப்படும் பொருட்கள் தீவிர வெப்பத்தால் சூடாகும். அப்போது அந்த காட்சிகள் பிரகாசமாக இருப்பதால் அவை பூமியில் இருந்து கண்டறியமுடியும். அதேபோல் ஒரு நட்சத்திரம் கருந்துளைக்கு மிக அருகில் இருக்கும்போது அது கருந்துளையின் தனித்துவமான ஈர்ப்பு விசை காரணமாக உறிஞ்சி இழுக்கப்படுகிறது.

அதிக சக்தி வாயந்த தொலைநோக்கிகள்

அதிக சக்தி வாயந்த தொலைநோக்கிகள்

அதிக சக்தி வாயந்த தொலைநோக்கிகள்(டெலஸ்கோப்) பயன்படுத்தி இந்த நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காட்சியாகியுள்ள நட்சத்திரம் சூரியனைப் போன்ற வெகு அமைப்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த கருந்துளை அசுரன் என்று விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த கருந்துளை மில்லியன் மடங்கு மிகப்பெரியது என கூறப்படுகிறது.

100 மில்லியன் கருந்துளைகள்

100 மில்லியன் கருந்துளைகள்

அண்ட வெளியில் மட்டும் 100 மில்லியன் கருந்துளைகளுக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. கருந்துளை என்பது 1916 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருந்துளை என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை என்றாலும் 1971 ஆம் கருந்துளை உறுதிசெய்யப்பட்டு கண்டறியப்படுகிறது.

சூரியனை விட ஐந்து மடங்கு பெரிது

சூரியனை விட ஐந்து மடங்கு பெரிது

சூரியனை விட ஐந்து மடங்கு பெரிதாக இருக்கும் நட்சத்திரங்களும் நட்சத்திர கருந்துளையாக மாறக்கூடும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதன்படி தற்போது இந்த காட்சிகளை சக்தி வாய்ந்த டெலஸ்கோப்கள் மூலம் கண்டறியப்பட்டு உலகிற்கு காட்டப்பட்டுள்ளது.

English summary
Gamma Ray Burst in Universe: Scientists Record the Colours of Cosmic Explosion

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.