ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஹை-டெக் மாஸ்க்கில் என்ன ஸ்பெஷல்?

கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதம் தடுப்பூசி, அதை போடும் பணிகள் இந்தியாவில் நாளுக்கு நாள் வேகமெடுத்துக்கொண்டே இருக்கிறது. பொது மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். அப்படி, இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். செல்ஃபி ஒன்றை பகிர்ந்து “நாங்கள் தடுப்பூசி போட்டுவிட்டோம், நீங்கள்?” என பதிவிட்டிருந்தார் அவர்.

இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் அணிந்திருந்த மாஸ்க் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வரும் ஹை-டெக் கேட்ஜெட் போல இருக்கிறதே, இது என்ன மாதிரியான மாஸ்க் என நாங்களும் ஆராய்ச்சியில் இறங்கினோம்.

இது உண்மையிலேயே ஹை-டெக் கேட்ஜெட்தான். எல்.ஜி நிறுவனத்தின் பியூரிகேர் வியரபிள் ஏர் பியூரிபைஃயரை (PuriCare Wearable Air Purifier) தான் இருவரும் அணிந்திருக்கின்றனர். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இதை மாஸ்க் என்று சொல்வதை விட ஒரு குட்டி ஏர் ப்யூரிஃபயர் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இருக்கும் காற்று மாசில் இருந்து தப்பிக்க இந்த ஏர் ப்யூரிஃபயரைப் பயன்படுத்தலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் முழு வடிவ ஏர் ப்யூரிஃபயர்கள் போலவே இதுவும் செயல்படும்.

காற்றை வடிகட்டுவதற்காக இரண்டு H13 HEPA ஃபில்டர்கள் இருக்கின்றன. எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சுவாசிக்க ஒரு குட்டி ஃபேன் ஒன்று இருக்கிறது. எப்படி சுவாசிக்கிறோம் என்பதை கண்காணிக்க ஒரு ரெஸ்பிரேட்டரி சென்சார் கொடுத்திருக்கிறார்கள். அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அதற்கேற்ப மேலே குறிப்பிட்ட ஃபேன் செயல்படும்.

இதற்கெல்லாம் ஆற்றல் வேண்டும் தானே. அதற்காக ஒரு குட்டி 820 mAh பேட்டரி வைத்திருக்கிறார்கள். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், இதனை அதிகபட்சமாக 8 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது எல்.ஜி நிறுவனம்.

LG PuriCare Wearable Air Purifier
LG PuriCare Wearable Air Purifier
LG PuriCare Wearable Air Purifier
LG PuriCare Wearable Air Purifier

வைரஸ் மற்றும் பேக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்களை அழிப்பதற்கு UV-LED லைட்டும் இதில் இருக்கிறது. ஆனால், இது கொரோனாவுக்காக தயாரித்ததாக எங்கும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை எல்ஜி நிறுவனம். மேலும் உள்வரும் காற்றை சுத்திகரிக்கும் இது வெளிச்செல்லும் காற்றை சுத்திகரிக்குமா என்பதும் குறிப்பிடப்படவில்லை. கொரோனா தொற்றை தடுப்பதில் அதுவும் மிக முக்கியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

இதில் இருக்கும் ஏர் ஃபில்டர்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம். அதனை எப்போது மாற்ற வேண்டும் என்று தெரிந்துகொள்ள, இதை LG ThinQ மொபைல் செயலியுடன் இணைக்க வேண்டும்.

இத்தனை வசதிகள் இருந்தால் விலையும் அதற்கேற்பதானே இருக்கும். இதன் விலை 249 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 18,000 ரூபாய்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.