கருவாடு மீனாகலாம்; ஆனால் சசிகலா: சி.வி.சண்முகம் தடாலடி!

ஹைலைட்ஸ்:

ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது
ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது
யாரை நம்பியும் இந்த இயக்கம் இல்லை. தொண்டர்களை நம்பி இருக்கும் இயக்கம்

சிறையில் இருந்து
சசிகலா
வெளியே வந்த பின்னர், அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தும் புஸ்வானமாகியது. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக சசிகலா அறிவித்தார். இருப்பினும், தேர்தலுக்கு பின்னர் அவர் மீண்டும் அரசியல் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் மனப்பான்மையில்
ஓபிஎஸ்
இருந்தாலும், அவரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில்
ஈபிஎஸ்
திட்டவட்டமாக இருக்கிறார். இதனிடையே, சசிகலா
அதிமுக
தொண்டர்களிடையே பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை சுமார் 8 ஆடியோக்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து ரிலீசாகும் ஆடியோக்கள் அதிமுக மேலிடத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. அவரது ஆடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கே.பி.முனுசாமியோ சசிகலாவுக்கு பயங்கரமாக எதிர்வினையாற்றி வருகிறார். ஆனால், சசிகலாவை சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்ல கே.பி.முனுசாமி யார் என்ற ரீதியில் அதிமுக தொண்டர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யாரை நம்பியும் இந்த இயக்கம் இல்லை. தொண்டர்களை நம்பி இருக்கும் இயக்கம் அதிமுக அம்மாவின் வீட்டில் அவருக்கு உதயவியாளாராக வந்தவர் சசிகலா. அவருக்கும் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

எடப்பாடியை விட பெரிய பதவிக்கு ஸ்கெட்ச் போடும் ஓபிஎஸ்!

மேலும், கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றும் அப்போது
சிவி சண்முகம்
தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.