கல்வி பரிசுத்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி..!

நாடு முழுவதும்
கொரானா
இரண்டாவது அலையின் தாக்கம் இருந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர்
நிவாரண நிதி
என்ற பெயரில் பல்வேறு பிரபலங்கள், பொதுமக்கள் என நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகே சேதுநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்
கீர்த்தி பிரியதர்ஷினி
.

மதுக்கடைகளை திறக்க உத்தரவு: மாநில அரசு அதிரடி..!

இவர் கடந்த 2019- 2020 கல்வி ஆண்டில் 12 ம் வகுப்பு கல்வி பயின்றார். அப்போது தமிழ்நாடு காவல் துறை சார்பாக அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தான் பெற்ற பரிசுத்தொகை 2500 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்து வத்திராயிருப்பு வட்டாட்சியர் மாதாவிடம் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.