கொரோனா சிகிச்சையில் இருந்து 3 மருந்துகள் நீக்கம்

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதார சேவை இயக்குனரகம் கடந்த 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: லேசான  மற்றும் அறிகுறியற்ற நோய் தொற்று கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த  ஐவர்மெக்டின், ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும்  பெவிபிராவிர் உள்ளிட்ட 3 மருந்துகளின் பயன்பாடு நீக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து பயனளிக்கவில்லை என்ற கண்டறிந்த பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.  லேசான அல்லது கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் நோய் பாதித்த 10 நாட்களுக்குள் ஆக்சிஜன் பொருத்தப்பட்டவர்களுக்கு  மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.