சினிமாவில் பிஸியாகும் முதல்வர் குடும்பத்தினர் – CM Family busy in Tamil cinema

சினிமாவில் பிஸியாகும் முதல்வர் குடும்பத்தினர்

07 ஜூன், 2021 – 14:44 IST

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பலரும் திரைத்துறையில் இருந்து வருகின்றனர். அதில் உதயநிதி சமீபத்திய சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுகப்பட்டார். அவரது மனைவி கிருத்திகா, வணக்கம் சென்னை , காளி போன்ற படங்களை இயக்கி உள்ளார். உதயநிதி தற்போது, மாறன் இயக்கத்தில் கண்ணை நண்பாதே படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் படப்பிடிப்பு நின்று போய் உள்ளது. இன்னும் 15 நாட்கள் படபிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. அடுத்து இந்தியில் வெளிவந்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீ-மேக்கில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். 20 சதவீதம் முடித்துள்ளனர். இதற்கு முன்பு மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். அந்த படமும் 80 சதவீதம் முடித்துவிட்டது.
தற்போது தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு, அவர் தொகுதியில் தினம் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஊரடங்கு முடிந்த உடன் அவர் அடுத்தடுத்து இரண்டு மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அவரது மனைவி கிருத்திகா, நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் வைத்து புதுப்படம் தொடங்க உள்ளார். அவரும் ஊரடங்கு முடிந்து படபிடிப்பு செல்ல உள்ளார். இந்த படம் பயணம் தொடர்பான கதை என்பதால் தமிழகம் முழுக்க பயணம் செய்து மாதிரி படமாக உள்ளது. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை செல்ல உள்ளனர்.
இதற்கிடையே அருள்நிதி நடிக்கும் இரண்டு படமும் உள்ளது. அழகிரி மகன் தயாவும் தொடர்ந்து பட தயாரிப்பில் மீண்டும் இறங்குவார் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையே கொரோனாவால் முடங்கி போன படங்களை விலை கொடுத்து வாங்கி தனியார் டிவியில் வெளியிடவும் பேச்சு வார்த்தை நடக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படம் ஒரு டிவிக்கு விற்கப்பட்டது.
மொத்தத்தில் முதல்வரின் குடும்பம் மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கிவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.