சியான் 60…ஹாட் அப்டேட் தந்த கார்த்திக் சுப்பராஜ்

|

சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் சியான் 60 படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைரக்டராக கார்த்திக் சுப்பராஜ் டம் பற்றிய சில ஹாட் அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், முதல் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் முழு நேர வில்லனாக நடித்துள்ளார். துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படக்குழுவும் அவ்வப் போது ஏதாவது அப்டேட் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சியான் 60 பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், படத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் நடிக்கும் 50 சதவீதம் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடன் படத்தின் வேலைகளை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் தவிர பாபி சிம்ஹாவும் மிக முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கிறாராம். இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கிறார். இதற்கு முன் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் ஒரு பாடலுக்கு இணைந்து நடித்துள்ள விக்ரமும், சிம்ரனும், கவுதம் மேனன் இயக்கிய துருவ நட்சரத்திரம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சியான் 60 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2021 ம் ஆண்டிற்குள் படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு துவக்கத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
director Karthik Subbaraj gave some hot updates on Chiyaan 60 in a recent interview.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.