டுவிட்டர் ப்ளூ: இனி அந்த சிக்கல் இல்ல., தாராளமா பதிவிட்ட டுவிட்டை திருத்தலாம்- ஆனா சந்தா கட்டணும்!

சமூகவலைதள வரிசையில் பிரதான ஒன்றாக இருக்கும் டுவிட்டர், தனது சேவையில் டுவிட்டர் ப்ளூ எனும் புதிய சந்தை முறையை அறிமுகம் செய்ய உள்ளது. டுவிட்டர் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. டுவிட்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமானது டுவிட் திருத்தம். ஒரு டுவிட் செய்த பிறகு அதில் இருக்கும் பிழைகளையோ, குற்றங்களையோ திருத்த முடியாத நிலை நீடித்து வந்தது. அதை தற்போது டுவிட்டர் நிறுவனம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

டுவிட் ப்ளூ எனும் பெயரில் புது சந்தா முறை

டுவிட் ப்ளூ எனும் பெயரில் புது சந்தா முறை

டுவிட்டர் நிறுவனம் தற்போது தனது டேவையில் டுவிட் ப்ளூ எனும் பெயரில் புது சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையானது பயனர்கள் பதிவிடப்பட்ட டுவீட்களை திருத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதில் டுவிட்களை சேமிக்கவும், ஒழுங்கபடுத்தவும் முடியும் என கூறப்படுகிறது.

டுவிட்டர் ப்ளூ சேவை

டுவிட்டர் ப்ளூ சேவை

டுவிட்டர் ப்ளூ சேவைக்கான சந்தாவின் ஆரம்ப விலை குறித்து பார்க்கையில், இது மாதம் ரூ.210 வரை வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த டுவிட்டர் நிறுவனத்தின் தகவலின்படி இதன் முதல்சேவையானது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தொடங்கப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட டுவிட்டர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட டுவிட்டர்

டுவிட்டர் ப்ளூ குறித்து பல்வேறு தகவல் பல மாதங்களாக உலா வந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு டுவிட்டர் முற்றுப்புள்ளி வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல் மேலும் புதிய அம்சம் சந்தா அடிப்படையில் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவை கனடா மற்றும் ஆஸ்திரேயாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அனைத்து பகுதிகளிலும் டுவிட்

விரைவில் அனைத்து பகுதிகளிலும் டுவிட்

வரும் காலங்களில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது. கனடா, ஆஸ்திரேலியா பகுதிகளில் சோதனை ஓட்டம் முடிந்ததும். அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும். நிறுவனம் இந்த சேவைக்கு கட்டணம் விதித்து சந்தா முறையையும் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கை

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கை

இதற்கிடையில் மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறையில் கொண்டுவர முயற்சிப்போம் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. இந்தியாவில் தடையின்றி டுவிட்டர் சேவையை தொடர்வதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பொதுமக்களின் தொடர்புக்கு டுவிட்டர் சேவை கட்டாயமாக உள்ளது எனவும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய டுவிட்டர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அளித்த தகவல்

நிறுவனம் அளித்த தகவல்

மேலும் அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் டூல்கிட்டு பிரச்சனை குறித்து அவர் விளக்கம் அளித்தார். அதேபோல் பேச்சு உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் காவல்துறை தங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி புதிய டிஜிட்டல் கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் பேச்சுரிமையை தடுக்கும் வகையில் விதிகள் இருந்தால் அதை எதிர்க்க டுவிட்டர் கண்டிப்பாக குரல் கொடுக்கும் என குறிப்பிட்டார். இறுதியாக டுவிட்டர் இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு பதிலளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பொருந்தக் கூடிய சட்டத்திற்கு இணங்க முயற்சிக்கும் என கூறியுள்ளது.

English summary
Twitter Blue Explain: Its Allow to Undo Tweet, Bookmark Folder, Reader and More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.