டோராவின் பயணங்கள்.. காடு மலைகளில் சுற்றித் திரியும் மாளவிகா மோகனன்!

|

சென்னை : மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்த ஹிட்டுக்காக தனுஷுடன் இணைந்து தனுஷ் 43ல் கதாநாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டோராவின் பயணங்கள் போல காடு மலைகளில் சுற்றித்திரியும் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டாகி உள்ளார்.

முக்கியமான வேடமாக

மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தில் நடித்து அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் அதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து கன்னடம்,ஹிந்தி என அடுத்தடுத்து அறிமுகத்தை கொடுத்து பிரபலமாகி வந்த மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்டை படத்தில் நடித்திருந்தார். சசிகுமாருக்கு ஜோடியாக இதில் இவரது கதாபாத்திரம் மிக சிறியது என்றாலும் மிக முக்கியமான வேடமாக இருந்தது.

பான்இந்தியா திரைப்படமாக

பான்இந்தியா திரைப்படமாக

விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்க தமிழில் என்ட்ரி குடுத்த வேகத்திலேயே விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். விஜய்,மாளவிகா மோகனன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றி பெற்று உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்தது. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான்இந்தியா திரைப்படமாக வெளியான மாஸ்டருக்கு பிறகு பல மொழிகளிலிருந்தும் மாளவிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது குறிப்பாக ஹிந்தியில்.

தனுஷுக்கு ஜோடியாக

தனுஷுக்கு ஜோடியாக

தனது நடிப்பால் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தனுஷ் கார்த்திக் நரேன் கூட்டணியில் D43 திரைப்படம் நடைபெற்று வருகிறது. திரில்லர் கதைகளை அசால்டாக கையாளக் கூடிய கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்க முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படபிடிப்பில் தனுஷ் உடன் எடுத்த பல க்யூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை

உலக சுற்றுச்சூழல் தினத்தை

ரசிகர்களின் மனசு கோணாமல் கவர்ச்சியை எந்த அளவுக்கு காட்ட முடியுமோ காட்டி அனைவரையும் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படங்களைக் காணவே ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்க இப்பொழுது டோரா புஜ்ஜி போல காடு, மலை, ஆறு,பாலைவனம், கடற்கரை என இயற்கையுடன் சுற்றித் திரியும் பல புகைப்படங்களை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளார்.

English summary
Malavika Mohanan releases her lates images in her social media pages.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.