தளர்வுடன் கூடிய ஊரடங்கு: காய்கறி – மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 14ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகளும், நடைபாதைக் கடைகளும் இன்றுகாலை திறக்கப்பட்டன. காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளும் செயல்பட்டதால் பொதுமக்கள் அவற்றை வாங்கிக் சென்றனர்.

சென்னை ராயப்பேட்டை ஜாம் பஜார் பகுதியில் மளிகைக் கடைகளும், காய்கறிக் கடைகளும் திறக்கப்பட்டன. சவுகார் பேட்டை பகுதியிலும் கடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்க வந்தனர்.

 இதேபோல் சிந்தாதரிப்பேட்டை மீன் சந்தையில் மொத்த மீன் வியாபாரிகள் ஏராளமானோர் காலை முதலே மீன்களை வாங்கிச் சென்றதால் விற்பனை களைகட்டியது.

 சென்னை சவுகார்பேட்டையில் காய்கறிக் கடைகளும், மளிகைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படத்தொடங்கியுள்ளன. அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.