தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை: மும்பையில் ரூ.101.5க்கு விற்பனை| Dinamalar

புதுடில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மாநில அரசுகள் விதிக்கும் ‘வாட்’ மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகின்றன. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ‘வாட்’ வரி உள்ளதால் அங்கு பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயைக் கடந்துவிட்டது. அடுத்ததாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அதிக வரி விதிக்கின்றன. அங்கும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த 4ம் தேதி ஆந்திரம், தெலுங்கானா, லேஹியிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் எட்டியது.


latest tamil news

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.31க்கும், எப்போதும் இல்லாத வகையில் மும்பையில் தற்போது ரூ.101.52க்கும் விற்பனையாகிறது. கடந்த மே 4ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை 18 முறை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.