நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.. மோடியின் சூப்பர் அறிவிப்பால் பெரிய சுமை குறைந்தது..!

பிரதமர் இன்று மக்களிடம் நேரடியாக உரையாற்றிய போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் கட்டுப்படுத்த பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வேக்சின் தட்டுப்பாட்டைப் போக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் எளிதாக வேக்சின் கிடைக்க முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதன் படி இனி கொரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யும் பொறுப்பை மத்திய அரசே ஏற்கும் என்றும் வரும் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு மத்திய அரசுக்குத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் இனி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்கும்.

இது இந்தியாவின் நடுத்தர மக்களுக்குப் பெறும் நிம்மதியை அளித்துள்ளது. ஏன் தெரியுமா..?!

இந்திய மக்கள்

இந்திய மக்கள் பயமுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது குறிப்பாக வேலைவாய்ப்பு, வருமானம், குடும்பத்தின் நிதிநிலையில் நெருக்கடி எனப் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனை

கொரோனா தொற்றைத் தடுக்கும் வேக்சின் மத்திய, மாநில அரசுகள் அளித்தாலும் அதிகளவிலான தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது.

வேக்சின் செலவு
 

வேக்சின் செலவு

கொரோனா மீதான பயத்தால், தொற்றில் இருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் 600 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் நிலையில் ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் முதல் 6 பேர் எனக் கணக்கு வைத்தால் கூட 3600 ரூபாய் செலவு ஆகும். 2வது டோஸ்-க்கு மீண்டும் 3600 என மொத்தம் 7200 ரூபாய்ச் செலவாகும் நிலை உருவாகியுள்ளது.

இனி நிம்மதி

இனி நிம்மதி

கொரோனா தடுப்பு மருந்துக்காக ஒரு சாமானிய நடுத்தரக் குடும்பம் 7000 ரூபாய் தொகையை இந்த நேரத்தில் செலவு செய்வது எளிதான காரியம் இல்லை. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளதன் படி இனி அனைவருக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்

வேக்சின் கொள்கையில் மாற்றம்

வேக்சின் கொள்கையில் மாற்றம்

மேலும் மோடி இன்றைய உரையில் மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது. இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும். மாநில அரசுகளுக்கு 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இலவச ரேசன் பொருட்கள்

இலவச ரேசன் பொருட்கள்

மேலும் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை தீபாவளி வரை ரேசன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் நாடு முழுவதும் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்” என்று பிரதமர் மோடி இன்று பேசினார்.

தாமதமான முடிவு

தாமதமான முடிவு

மத்திய அரசே வேக்சின்களை வாங்கி, இலவசமாக மாநில அரசுகளுக்குக் கொடுக்கும், வேக்சின் விநியோகத்தை முழுக்க முழுக்க மத்திய அரசு ஏற்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது நல்ல முடிவு என்றாலும் மிக மிகத் தாமதமான அறிவிப்பு என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Free Vaccine to all Modi’s big announcement: Middle-class people burden reduced.. how?

Free Vaccine to all Modi’s big announcement: Middle-class people burden reduced.. how?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.