பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு ஆதரவு தெரிவிக்கும் யாஷிகா ஆனந்த்!

இந்தி டிவி நடிகர் பியர்ல் புரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் சில நடிகைகள் பியர்ல் புரி குற்றமற்றவர் என்று சொல்லி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தி நடிகை அனிதா ஹாசனந்தனி கூறும்போது, ‘பியர்ல் புரி மோசமானவர் இல்லை. அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் புகார் அளித்துள்ளனர்’ என்றார். இவர் தமிழில் விக்ரமுடன் சாமுராய் படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்தும் பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பியர்ல் புரியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘பியர்ல் புரி மிகவும் அமைதியாக பேசக்கூடியவர். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை பொறுத்திருப்போம். நான் பியர்ல் புரிக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறியுள்ளார்.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.