பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், தனது காதலி கேரி சைமண்ட்ஸை மணந்தார்: லண்டனில் எளிமையாக நடந்த திருமணம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான் தனது 56 வயதில் தனது காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று திருமணம் செய்தார் என பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக முறையில் இருவரின் திருமணமும் நடந்தது.

ஆனால், பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரின் அலுவலகத்துக்கு கூட அதிகாரபூர்வமாக அவர் தெரிவிக்கவில்லை என்று தி சன் நாளேடு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் தற்போது கரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வரும் சூழலிலும், நடப்பில் உள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றால் 30 பேருக்கு மேல் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது என்றகட்டுப்பாடு இருக்கிறது. ஆதலால், குறைந்த அளவை ஜான்ஸன் திருமணத்தில் உறவினர்கள் பங்கேற்றனர்.

33 வயதான சைமண்ட்ஸுடன் ஜான்ஸன் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் போரிஸ் ஜான்ஸன் அறிவித்திருந்தார். இருவருக்கும் ஒரு வயதில் வில்பிரட் என்ற மகன் உள்ளனர்.

போரிஸ் ஜான்ஸனுக்கு இது 3-வது திருமணம் , சைமண்ட்ஸுக்கு முதல் திருமணமாகும். ஜான்ஸனுக்கு இதற்கு முன் நடந்த இரு திருமணங்களிலும் சேர்த்து 5 குழந்தைகள் குறைந்தபட்சம் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக குழந்தைகள் குறித்து ஜான்ஸன் கூறியதில்லை.

பிரிட்டனில் பிரதமராக ஒருவர் பதவியில் இருந்தது ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப்பின் இதுதான் முதல் முறையாகும். கடைசியாக கடந்த 1822ம் ஆண்டு லார்ட் லிவர்பூல் பிரதமராக இருக்கும்போது திருமணம் செய்தார்.

தனக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை ஜான்ஸன் மறைந்தமைக்காக கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைக் குழுவிலிருந்து போரிஸ் முன்பு நீக்கப்பட்டிருந்தார். இரு மனைவிகளை விவாகரத்து செய்துள்ள ஜான்ஸன் இதுவரை தனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்பதை தெரிவித்தது இல்லை. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் தனது 2-வது மனைவி மரினா வீலரை ஜான்ஸன் விவாகரித்து செய்தார்.

போரிஸ் ஜான்ஸன், சைமண்ட்ஸ் திருமணம் குறித்து அறிந்த பலதலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். வடக்கு அயர்லாந்து முதல் அமைச்சர் அர்லன் போஸ்டர் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ உங்களின் திருமண நாளுக்கு போரிஸ்ஜான்ஸன் கேரி சைமண்ட்ஸ் இருவருக்கும் எனது மிகப்பெரிய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.