பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 102 ரூபாயை நெருங்குகிறது..!

இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் தொடர்ந்து சரிவு பாதையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் வேளையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் கிட்டதட்ட தினமும் எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருந்து நிலையில், தற்போது தமிழ்நாடு, டெல்லி உட்படப் பல மாநிலங்களில் தளர்வுகள் உடன் ஊரடங்கு அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..!

இதனால் பெட்ரோல், டீசல் தேவை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது, இந்தச் சூழ்நிலையில் எரிபொருள் விலையை உயர்த்தியிருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை அடையும்.

ரிசர்வ் வங்கி முக்கிய வேண்டுகோள்

ரிசர்வ் வங்கி முக்கிய வேண்டுகோள்

ஏற்கனவே ரிசர்வ் வங்கி நாட்டின் வர்த்தகம் வளர்ச்சியை மேம்படுத்த விலைவாசியைக் குறைக்க மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒரு தயாரிப்பு அல்லது உற்பத்தி பொருளின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியக் காரணியாக இருக்கும் எரிபொருள் விலை இன்று ஒரு நாள் இடைவேளையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் 26 பைசா முதல் 29 பைசா வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.76 ரூபாயாகவும், மும்பையில் 101.98 ரூபாய் அளவிலும் உயர்ந்துள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள்
 

5 மாநில தேர்தல் முடிவுகள்

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மே 4ஆம் தேதி முதல் சுமார் 21 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் மத்திய அரசின் அதிகப்படியான கலால் வரி தான்.

கலால் வரி அளவீடு

கலால் வரி அளவீடு

மத்திய அரசு தனது கலால் வரி அளவீட்டைக் குறைப்பதன் மூலம் அனைத்துப் பொட்ரோலியம் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும். இதனால் நாட்டின் விலைவாசி குறைந்து வர்த்தகச் சந்தை மீண்டும் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகும்.

இன்றைய பெட்ரோல் விலை

இன்றைய பெட்ரோல் விலை

இன்று நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை

சென்னை – 96.23 ரூபாய்

டெல்லி – 94.76 ரூபாய்

கொல்கத்தா – 94.76 ரூபாய்

மும்பை – 100.98 ரூபாய்

பெங்களூரு – 97.92 ரூபாய்

ஹைதராபாத் – 98.48 ரூபாய்

கோழிக்கோடு – 95.17 ரூபாய்

இன்றைய டீசல் விலை

இன்றைய டீசல் விலை

இன்று நாட்டின் முக்கிய நகரங்களில் டீசல் விலை

சென்னை – 90.38 ரூபாய்

டெல்லி – 85.66 ரூபாய்

கொல்கத்தா – 88.51 ரூபாய்

மும்பை – 92.99 ரூபாய்

பெங்களூரு – 90.81 ரூபாய்

ஹைதராபாத் – 93.38 ரூபாய்

கோழிக்கோடு – 90.59 ரூபாய்

ஜிஎஸ்டி வரி வருமானம்

ஜிஎஸ்டி வரி வருமானம்

கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள வர்த்தகப் பாதிப்பு மூலம் ஜிஎஸ்டி வரி வசூல் பெரியளவில் பாதித்துள்ளது. இதைச் சமாளிக்கவே எரிபொருள் மீதான விரியை உயர்த்தித் தொடர்ந்து இதன் விலையை உயர்த்தி வருகிறது. இந்தக் கட்டமைப்பு மூலம் மத்திய அரசு அதிகளவிலான வரி வருமானத்தைப் பெற்ற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol, diesel prices hiked again today (June 7). Check latest rates in chennai

Petrol, diesel prices hiked again today (June 7). Check latest rates in Chennai

Story first published: Monday, June 7, 2021, 12:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.