போலி இ-பதிவு.. திமுக அமைச்சர் பெயரை சொல்லி அல்லக்கை அக்சர் அலி அடாவடி.. பெண் காவல் அதிகாரிக்கு மிரட்டல்..!

போலி இ-பதிவுடன் பிடிபட்ட ஆட்டோ ஓட்டுனர் பெண் காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம், மாநிலம், மண்டலம் அல்லது ஒரு நகரை விட்டு பிற நகருக்கு செல்லும் போது இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை பாரிமுனை அருகே வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர். ஆட்டோவை இயக்கிய அக்சர் அலி என்பவன், நான் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் மருத்துவ காரணத்திற்காக வெளியே செல்வதாகவும் கூறி போலியான இ-பதிவை பெற்றுவிட்டு ஆட்டோவில் சவாரி ஏற்றி வந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய முயற்சித்த நிலையில், வாகனத்தின் சாவியையும் பறித்து வைத்துக் கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த முத்தியால்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் கிருத்திகா, ஆட்டோவை பறிமுதல் செய்த நிலையில், ஆட்டோவின் சாவியை தருமாறு கொடூரன் காவல் உதவி ஆய்வாளரை மிரட்ட தொடங்கினான். 

மேலும், காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசி அவதூறு செய்த நிலையில், என்னுடைய பணியை நான் செய்கிறேன் என்றும் ஆய்வாளர் விளக்கம் அளித்தும் அவன் கண்டுகொள்ளவில்லை. ஒரு பெண் நீயே இப்படி பேசுகிறாய்? எனவும், இழிவாக பேசிய கொடூரன் வாய்ச் சவடால் விட்டு தகராறு செய்தான். 

மேலும், அமைச்சர் சேகர்பாபுவை எனக்கு நன்றாக தெரியும்., நான் இந்த ஏரியாவில்தான் 40 வருடமாக வாகனம் ஓட்டி வருகிறேன் என்று பேசிய அக்சர் அலி இறுதியில், நீ நாசமாய் போவாய் என்று பெண் காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான். 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர்களின் பெயரை அல்லது கட்சி பிரமுகரின் பெயரை வைத்துக்கொண்டு யாரும் ஏகவசனம் பேசி யாருக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்று அமைச்சர்களுக்கே அட்வைஸ் செய்து வரும் நிலையில், அல்லக்கைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் அரங்கேற்றும் அட்டகாசங்கள் தொடர்ந்து வருகிறது. 

இவ்வுளவையும் செய்துவிட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், காவல்துறை அராஜகம் என்று கோசம் வேற.. இதெல்லாம் என்ன பிழைப்போ.,

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.