முடங்கியது இபதிவு இணையதளம்: பொதுமக்கள் அவதி!

கொரோனா
தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற
ஊரடங்கு
அமலில் இருந்த நிலையில், இன்று முதல் சில தளார்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காய்கறி, மளிகை, பலசரக் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுய தொழில் மேற்கொள்ளும் எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர்கள்
இபதிவு
முறையில் விண்னப்பித்து பணி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக
https://eregister.tnega.org
என்ற இணையதளத்தில் சுய தொழில் என்ற ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இபதிவு இணையதளம் முடங்கியுள்ளது. அதிகமானோர் விண்ணப்பித்த காரணமாக இபதிவு இணையம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபதிவு

இ பதிவு செய்வது செம ஈஸி: இதை மட்டும் செஞ்சா போதும்!

இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விரைவில் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.