ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஹைலைட்ஸ்:

முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்
டோக்கன்களை அட்டை தாரர்களின் வீடுகளுக்கு பிற்பகல் நேரத்தில் சென்று விநியோகிக்க வேண்டும்
முற்பகலில் கடைகளில் வழக்கம் போல அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப் பட வேண்டும்

கொரோனா
பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவானது வருகிற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி ப்வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட நேரத்திலேயே ரேஷன் கடைகள் செயல்படும்.

கொரோனா
நிவாரண நிதி
இரண்டாவது தவணை, 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற 15ஆம் தேதி முதல் அரசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்களை வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று கடைப் பணியாளர்கள் விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் இலவசம்: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு உத்தரவு

மேற்கண்ட நாட்களில் இந்த டோக்கன்களை அட்டை தாரர்களின் வீடுகளுக்கு பிற்பகல் நேரத்தில் சென்று விநியோகிக்க வேண்டும் எனவும், முற்பகலில் கடைகளில் வழக்கம் போல அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப் பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.