இந்த ஊரடங்கில் Vi டபுள் டேட்டா பேக் தான் நமக்கு சரியானது.. இவ்வளவு டேட்டா இருந்தா ஜமாய்க்கலாமே.!

இந்த ஊடரங்கு காலத்தில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்படுகிறது. இதை வழங்குவதற்கு வோடபோன் ஐடியா (Vi) அதன் பயனர்களுக்கு டபுள் டேட்டா பெனிஃபிட் (Vodafone-Idea Double Data Benefit) என்று அழைக்கப்படும் ‘இரட்டை தரவு சலுகை’ நன்மையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியத் தொலைத் தொடர்பு வட்டத்தில் வேறு எந்த ஒரு ஆபரேட்டரும் இப்படி ஒரு சலுகையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏன், ஜியோ நிறுவனம் கூட இப்படி ஒரு திட்டத்தை வழங்கவில்லை என்பதே உண்மை.

டபுள் டேட்டா பெனிஃபிட் (Vodafone-Idea Double Data Benefit) என்றால் என்ன?

டபுள் டேட்டா பெனிஃபிட் (Vodafone-Idea Double Data Benefit) என்றால் என்ன?

டபுள் டேட்டா பெனிஃபிட் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு முதலில் இது என்ன சலுகை என்பதை தெளிவுபடுத்திவிடுவோம், ”டபுள் டேட்டா பெனிஃபிட்” கிடைக்கும் திட்டங்களை ஒரு பயனர் தேர்வு செய்யும்பொழுது, அந்த பயனருக்கு தினசரி கிடைக்கும் டேட்டா நன்மை அப்படியே இரட்டிப்பாகப்படுகிறது.

இன்னும் தளிவாக சொன்னால் இதான் மேட்டர்

இன்னும் தளிவாக சொன்னால் இதான் மேட்டர்

உதாரணத்திற்கு, நீங்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களின் தினசரி டேட்டாவின் அளவு அப்படியே முழுமையாக இரட்டிப்பாக்கப்பட்டு, இந்த சலுகையில் மூலம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கும்.

வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!

 டபுள் டேட்டா சலுகை

டபுள் டேட்டா சலுகை

இந்த திட்டத்திற்கான கட்டணம் என்னவோ வெறும் 1.5 ஜிபி டேட்டாவுக்கானது தான், ஆனால், டபுள் டேட்டா சலுகை என்பதனால் இது வாடிக்கையாளரின் தினசரி டேட்டாவை இரட்டிப்பாகவும், இலவசமாகவும் வழங்குகிறது. இந்த சலுகையை வோடபோன் ஐடியா நிறுவனம் இப்போது வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களின் விலை கூட கணிசமாகத் தான் இருக்கிறது. டபுள் டேட்டா நன்மையுடன் உங்களுக்கு வேறு ஒரு நன்மையையும் இதில் கிடைக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள இறுதி வரை தொடர்ந்து படியுங்கள்.

Vi டபுள் டேட்டா சலுகை கிடைக்கும் திட்டம்

Vi டபுள் டேட்டா சலுகை கிடைக்கும் திட்டம்

சரி இப்போது, Vi நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகை கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்கு, Vi நிறுவனம் தனது பயனர்களுக்கு டபுள் டேட்டா சலுகையுடன் மூன்று திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. அதன்படி, ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 ஆகிய திட்டங்களில் உங்களுக்கு டபுள் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டங்கள் மூன்றும்,எத்தனை நாட்களுக்கு எவ்வளவு கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது என்று விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

வோடபோன் ஐடியா ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ .299 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது டபுள் டேட்டா சலுகை திட்டம் என்பதனால், பயனர் தினமும் மொத்தமாக 4 ஜிபி தினசரி டேட்டாவை அனுபவிக்க முடியும். இத்துடன், இத்திட்டம் வரம்பற்ற அனைத்து நெட்வொர்க்கு குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்து நன்மைகளையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் OTT நன்மையாக Vi மூவிஸ் மற்றும் டிவி நன்மையையும் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ .449 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு இரட்டை தரவு சலுகையின் கீழ் 4 ஜிபி தினசரி தரவை வழங்குகிறது (சலுகை இல்லாமல் 2 ஜிபி). மேலும், இத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றுடன் கூடுதல் நன்மையாக, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச OTT சந்தாவையும் இத்திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!கடலில் வேகமாக பரவும் ‘கடல் சளி’ ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

வோடபோன் ஐடியா ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்

Vi இடமிருந்து கிடைக்கும் இறுதியான டபுள் டேட்டா திட்டம் இதுவாகும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற திட்டங்களைப் போலவே இதுவும் தினசரி 4 ஜிபி டேட்டாவை (சலுகை இல்லாமல் 2 ஜிபி டேட்டா) வழங்குகிறது. அதேபோல், அணைத்து நெட்வொர்க் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், Vi மூவிஸ் மற்றும் டிவி தளத்தின் இலவச சந்தாவுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

முக்கியமான கூடுதல் நன்மை இது தான்

முக்கியமான கூடுதல் நன்மை இது தான்

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்கள் அனைத்தும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகையுடன் வருகின்றன. இது Vi ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட சலுகையாகும், இது பயனர்கள் பயன்படுத்தப்படாத எல்லா தரவையும் வாரம் முதல் வார இறுதி வரை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு அற்புதமான சலுகையை இப்போது வரை வேற எந்த டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Vodafone-Idea Now Offers Double Data Benefits With Rs 299 Rs 499 and Rs 699 Prepaid Plans In India : Read more about this in Tamil GizBot

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.