சலூன் கடை முதல் டாஸ்மாக் திறப்பு வரை – தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதன் காரணாமக வரும் 21 ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகளையும் அரசு அமல்படுத்தி உள்ளது. 

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் வரும் 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வரவுள்ளன. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது அரசு. 
அந்த 11 மாவட்டங்கள் என்னென்ன?
கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். 
கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
11 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்
>ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. 
>தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கபடும்.  
>மின்பணியாளர், ப்ளம்பர், கணினி உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதுநீக்குவோர் வீடுகளுக்கு சென்று சேவையாற்ற 9 – 5 மணி வரை அனுமதி.
>வாடகை வாகனங்கள், டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்க அனுமதி.
>வேளாண் உபகரணங்கள், பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
>அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்பு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 6 முதல் 9 மணி வரை அனுமதி.
>கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.
>கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.
>செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.
>மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.
27 மாவட்டங்களுக்கான தளர்வுகள்
>அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
>பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி.
>தொழிற்சாலைகள் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
>தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் இ-பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்குச் சென்று வர அனுமதி.
>தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20% பணியாளர்கள் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது.
>வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.
>கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.