தலைமை நீதிபதி ரமணா திருமலையில் வழிபாடு| Dinamalar

திருப்பதி:திருமலை ஏழுமலையானை வழிபட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா, நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்தினருடன் வந்தார். அன்றிரவு அவர், திருமலையில் தங்கினார்.

நேற்று காலை ஏழுமலையானை வழிபடச் சென்ற அவரை வரவேற்று, தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.தரிசனத்திற்கு சென்று திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து தீர்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கினர்.

”திருமலை ஏழுமலையான் ஆசீர்வாதத்தால் மட்டுமே, இந்த நிலையை அடைந்துள்ளேன். ஏழுமலையான் ஆசியால், பல அற்புதங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன,” என, தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.