திருவண்ணாமலையில் ஆதரவற்ற ஏழைகள் 100 பேருக்கு உணவு வழங்கிய நடிகர் ஆரி

திருவண்ணாமலை சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு நடிகர் ஆரி நேரடியாகவே சென்று உணவு வழங்கியுள்ளார்.

கூட்டம் அதிகமாக இருந்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது அரசு. அதன்படி, தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மூடப்பட்டுள்ளது.

image

மாதம்தோறும் நடக்கும் கிரிவலத்தை நம்பி கோயிலைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து இங்கேயே தங்கி சாலைகளில் யாசகம் பெற்று வறுமை போக்கிக்கொண்டிருந்த சூழலில், தற்போது கொரோனாவால் கோயில் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகையில்லாமல் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

image

அவர்களுக்கு உதவும் விதமாக ’நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் ஆரி சாலைகளில் வசிக்கும் ஏழைகள் 100 பேருக்கு தனது ’மாறுவோம்:மாற்றுவோம்’ அறக்கட்டளை மூலம் உணவு வழங்கியுள்ளார். பல மாவட்டங்களில் ரசிகர்களே உணவு அளிக்கும்போது, நடிகர் ஆரி களத்தில் குதித்து நேரடியாகவே உணவு வழங்கியது பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.