பிரெஞ்சு ஓபன் – ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

பாரிஸ்:
பிரெஞ்சு-ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார்.
முதல் இரு செட்களை சிட்சிபாஸ் 6-3, 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ஸ்வெரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
 
இறுதியில், ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்தது.
22 வயதாகும் ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் இறுதியில் சிட்சிபாஸ் நடால் அல்லது ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.